"ஒவ்வொரு வினைக்கும், அதற்க்கு சமமான மற்றும் எதிர்வினை உண்டு."- நீயூட்டனின் மூன்றாம் விதி.
For Every action, there is equivalent and opposite reaction.- Newton's 3rd law of motion.
நாம் பள்ளியில் படித்தபோதிலிருந்து இன்று வரை நம்மை பின் தொடரும் ஒரு விதி. நாம் யோசித்து உண்டா? இருக்கலாம், ஒரு சில வேளைகளில், ஆனால் பெரும்பாலும் இல்லை.
ஊழல் பற்றி கவலை கொண்டது உண்டு, அரசியல்வாதிகளை பற்றி குறை கூறுவது உண்டு. அவர்களை உருவாக்கியவர்களைப் பற்றி? கொஞ்சம் குறைவுதான்.
"தேர்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாள்"- பெரியார்.
அப்பொழுது இதுயார் தவறு. நம்முடையது என்பது தானே சரி. இதில் அப்லே செய்து பாருங்கள் நியூட்டனின் விதியை!
இந்த விதி அறிவியல் உண்மை என்றாலும்,
திருக்குறளின்
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற குறளின் அப்டேட்டட் போல என்னக்கு தோன்றுகிறது.
அது சரி நியூட்டனுக்கும் வள்ளுவர் பற்றி தெரிந்துபோல.
இக்குறள் கூற வருவது ஒருவருக்கு முற்பகலில் செய்யும் தீஞ்செயல் உனக்கு பிற்பகலில் வேறுவொருவர் செய்வார் என்பதாம். அப்பொழுது நன்மை செய்தால், அதுவும் அப்படிதான். இதற்கு பல உவமை இருக்கிறது.
நன்மைகள், தீமைகள் என எதுவாக இருந்தாலும், நீ எதை செய்யாதாலும், அதுவே உனக்கும் நடக்கும் என்பதே நிதர்சனம். நாம் இருக்கும் வாழ்நாள் மிக குறைவு, இப்படிப்பட்ட உலகத்தில், நாம் ஏன் பிறருக்கு நன்மை செய்யக்கூடாது. பிறருக்கு செய்யும் தீமை நமக்கு நாமே தலையில் வாறி போட்ட மண் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
விட்டுக்கொடுப்பவர் கெட்டுபோவதில்லை. நன்மை செய்வோம்! நலமுடன் வாழ்வோம்!
No comments:
Post a Comment