Tuesday, 22 May 2018

நியூட்டனின் மூன்றாம் விதி

"ஒவ்வொரு வினைக்கும், அதற்க்கு சமமான மற்றும் எதிர்வினை உண்டு."- நீயூட்டனின் மூன்றாம் விதி.

For Every action, there is equivalent and opposite reaction.- Newton's 3rd law of motion.

நாம்  பள்ளியில் படித்தபோதிலிருந்து இன்று  வரை நம்மை பின் தொடரும் ஒரு விதி. நாம்  யோசித்து  உண்டா? இருக்கலாம், ஒரு சில  வேளைகளில், ஆனால்  பெரும்பாலும்  இல்லை.

ஊழல் பற்றி கவலை கொண்டது உண்டு, அரசியல்வாதிகளை பற்றி  குறை கூறுவது உண்டு. அவர்களை உருவாக்கியவர்களைப் பற்றி? கொஞ்சம் குறைவுதான்.

"தேர்தெடுக்கப்பட்டவன்  அயோக்கியன்  என்றால், தேர்ந்தெடுத்தவர்கள்  முட்டாள்"- பெரியார்.

அப்பொழுது இதுயார்  தவறு. நம்முடையது  என்பது தானே  சரி. இதில் அப்லே செய்து பாருங்கள் நியூட்டனின்  விதியை!

இந்த  விதி அறிவியல் உண்மை என்றாலும்,
திருக்குறளின்

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்   தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற  குறளின்  அப்டேட்டட் போல என்னக்கு தோன்றுகிறது.
அது  சரி  நியூட்டனுக்கும்  வள்ளுவர் பற்றி தெரிந்துபோல.

இக்குறள்  கூற வருவது ஒருவருக்கு  முற்பகலில் செய்யும் தீஞ்செயல் உனக்கு பிற்பகலில்  வேறுவொருவர்  செய்வார்  என்பதாம். அப்பொழுது  நன்மை  செய்தால், அதுவும்  அப்படிதான். இதற்கு  பல உவமை இருக்கிறது.

நன்மைகள், தீமைகள் என எதுவாக இருந்தாலும், நீ எதை செய்யாதாலும், அதுவே உனக்கும் நடக்கும் என்பதே நிதர்சனம். நாம்  இருக்கும் வாழ்நாள் மிக குறைவு, இப்படிப்பட்ட உலகத்தில், நாம் ஏன் பிறருக்கு நன்மை செய்யக்கூடாது. பிறருக்கு செய்யும் தீமை நமக்கு நாமே தலையில் வாறி போட்ட மண் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
விட்டுக்கொடுப்பவர் கெட்டுபோவதில்லை. நன்மை செய்வோம்! நலமுடன் வாழ்வோம்!


Friday, 17 March 2017

தக்காளிச்சட்னி

என்னடா இது தலையங்கம் சட்னி,இட்லினு பாக்காதிங்க. இருக்கு இதுக்கும், சொல்லபோற விசியத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு!!

நாமும் வலைபதியனுமேனு மூளைய கசக்கி  யோசிக்கும் போது உதித்தது தான் இந்த தக்காளிசட்னி. ஆமா! ஆறு(Tamil Film) படத்துல வரும் பிரபல டியலாக்.இப்போ புரியுதா ஏன் இந்த தலையங்கம் என்று!

நாம பொதுவ திருமணங்களுக்கு போறொமோ, இல்லயோ சப்பாட்டுக்கு சரியா போய்டுவோம். கோவ படதிங்க நான் என்னை பற்றி சொன்னேன். அங்கு நடக்கும் வேடிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது. குறைந்து ஏதேனும் ஒன்று நிகழும். அதில் ஒன்று தான் தான் இலைக்கு சோறு வேண்டும் என்பதற்காக அடுத்தவர் இலைக்கு சோறு வை என்று சொல்லும் முறை. இவர்கள்  தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு பெற்றுக்கொள்வார்கள். வெளியில் ஒரு குழு காத்திருக்கும். அவர்கள் பெயர் பிச்சைக்காரர்கள். இவர்களுக்கு கிடைப்பது மீந்த உணவு அல்லது அடி. இவர்களும் மனிதர்கள் தான். இவரும் பசியில் தான் இருக்கிறார்கள். ஆனால் இருவேறு உபசரிப்பு. ஏன்எனில் அவர்கள் அங்கு ஒரு பிச்சைக்காரனாக பார்க்கபடுகிறானே தவிர மனிதனாக பார்க்கப்படவில்லை. இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. அது நாம் பிச்சைக்காரன் இல்லையே என்பது.

இது போல்தான் வாழ்க்கையில் பல பேரின் ஆசைகள், வலிகள், சந்தர்பங்கள் என எல்லாம் நிராகரிக்கப்படுகிறது. யாரும் அவர்களின் இடத்தில் இருந்து பார்பதில்லை. பல மக்கள் மாக்களாக மாறுவதற்க்கு இதுவே காரணம். இதனால் பல பேர் உதாசினபடுத்தப்படுவார்கள். இந்த உலகம் சுயநலம் உலகம் அல்ல. இங்கு இருக்கும் சிலர் பேர் சுயநலவாதிகள் என்பது தான் உண்மை. இவர்கள் தனக்கு மட்டும் தான் இறைவன் உடலில் இரத்தத்தை படைத்து போன்றும் மற்றவர்களுக்கு தக்காளிச்சட்னியை படைத்தது போன்றும் எண்ணுகிறார்கள். அவர்கள் அக்மார்க் முத்திரை தன் மீது குத்திக்கொண்டு அவர்களின் வேலையைய் பார்த்தாலே போதுமானது, அதைவிட்டு அவர்கள் பேசும் வியாக்கியானம் இருக்கிறதே! அவர்களிடம் இருக்கும் தக்காளிச்சட்னியை எடுத்துவிடலாம் என தோன்றும்.இப்படி போன்றவர்களுக்கு நான் கூற விரும்பும் ஒரு கருத்து "வாழ்க்கை ஒரு வட்டம்". யோசித்துக்கொள்ளவும்.

இது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பதும் இரத்தம் தான் என்று எண்ணுவோம். தேவைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பணம் மட்டுமே ஒரே தேவையாக இருக்கமுடியாது.உங்களின் நேரம் கூட சிலருக்கு உதவியாக இருக்கலாம். நீங்கள் அவர்களுக்காக முந்நிற்பது அவர்களின் தேவைகளாக இருக்கலாம். இதுவே அவர்களுக்கான தேவைகளாக இருக்கலாம்.நம்மை தேடி வருபவர்களுக்கு நாம் முந்நிற்ப்போம். அவர்கள் உணர்வுகளை நம் உணர்வுகளாக மதிப்போம்! உதவி என்பவருக்கு நம்மால் இயன்றதை செய்வோம்! நாட்டின் நலம் பேணுவோம்! உலக அமைதி காப்போம்!

ஒருமனிதனை வாழ வைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலவராவர்- அல்குர்ஆன்.

Monday, 24 October 2016

The Dad

Here, I speak about the people who we depends them, but they never depend us.
Yeah!!!! I will speak about the parents especially, Dad❤

In my childhood, I disliked dad. Because, I always scold me. He scorned me. Regularly he irritating me. So I disliked him.

After some days, a sudden change, whenever I met her colleagues, they said same statement like "his works are too tough then others. So, you should be study well. So many advice". These are bored me while childhood.

I becomes to love him, when I'm in starting of mature. I ready to realized about him. When I was child, he worked as meat chopper. Further, he worked in Malaysia, Dubai, Saudi and Qatar. We know climate and weather of gulf countries in construction sites. There, too hot in day and too cold in night.
Here, I'm using the word "weathering". It is the geological term. Which is defined as " the change of rocks due to weather change". Inspire of his working, he weathered. It should be the suitable word.
He sweated. I'm in the air conditioned room.

I heard some gossip about me that's I'm the good. I don't know how they predict.
But the all credits goes to my dad. Many more time I saw my dad in public and family. He always admire people. He always loved them. I just reflect my dad's behavior. That's good. And he make always silly things, this also cute. He give the respect to all of the people. For my good attitudes , I just modified my dad.

Dady, thank you for your grateful supporting & wonderful life.
Thank You
Love You Dad.